சிம்புவின் 'மாநாடு' படத்தை யாரெல்லாம் பார்க்கலாம் ?: வெளியானது தணிக்கை விவரம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘மாநாடு’. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, ஒய்.ஜி.மகேந்திரன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இதையும் படிக்க | குக் வித் கோமாளி அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’: அனிருத் – அறிவு இணைந்துள்ள கியூட் பொண்ணு பாடல் இதோ

இந்தப் படத்தின் தணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன் படி தணிக்கைத் துறை இந்தப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மாநாடு திரைப்படம் வருகிற 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>