சிம்புவின் 'மாநாடு' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய பிரபல டிவி

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கும், யுவனின் இசைக்கும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்தப் படம் வெளியாவதில் தயாரிப்பு தரப்புக்கு சிக்கல்கள் எழுந்தன. அதன் ஒரு பகுதியாக மாநாடு படத்தின் தொலைக்காட்சி உரிமை விற்கப்படாமல் இருந்ததே பிரச்னைக்கு காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியதும் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. 

இதையும் படிக்க | சிம்புவுக்கு வெற்றி கொடுக்குமா இந்த ‘மாநாடு’ ?: படம் எப்படி இருக்கிறது ? திரைப்பட விமர்சனம்

இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், சுப்பு பஞ்சு, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>