சிம்புவுக்கு கிடைத்த மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு

துபை இந்தியாவை சேர்ந்த சில பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் பார்த்திபனுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றார். 

இந்த நிலையில் இந்த விசா நடிகர் சிம்புவுக்கு வழங்கப்படவிருக்கிறது. இதற்காக  நடிகர் சிம்பு தற்போது துபை சென்றுள்ளார். அவருக்கு நாளை (பிப்ரவரி 3) பிறந்தநாள் என்பதால் பிறந்த நாள் பரிசாக அவருக்கு கோல்டன் விசா வழங்கப்படுகிறது. 

இதையும் படிக்க | ஆங்கில நடிகரின் படத்தைத் தவறாக பயன்படுத்தியற்கு மன்னிப்பு கேட்ட மருத்துவமனை

நடிகர் சிம்பு தன்னுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்த நிதி அகர்வாலை காதலித்து வருவதாகவும், இதனையடுத்து நாளை அவரது பிறந்த நாளை முன்னிட்டு திருமணத்தை அறிவிப்பார் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்தத் தகவலை இருவரும் உறுதிபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கோல்டன் விசாவை முன்னதாக மம்மூட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், மீரா ஜாஸ்மின், சஞ்சய் தத், த்ரிஷா உள்ளிட்டோர் பெற்றுள்ளனர். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>