சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு பிறகு பிரபல ஹீரோவுக்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா – ''இது மாநாடு 2''

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் கடந்த வருடம் நவம்பர் 25 ஆம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் தனுஷ் கோடி என்ற வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா மிரட்டலான நடிப்பை வழங்கியிருந்தார். படத்தின் வெற்றிக்கு அவரது நடிப்பும் ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. 

இதனையடுத்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா ‘டான்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது.

இந்த நிலையில் த்ரிஷா, இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.  இந்தப் படத்தை எனிமி படத் தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரிக்கிறார். 

இதையும் படிக்க | பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிதாக களமிறங்கும் பிரபலம் யார் தெரியுமா?

இந்த நிலையில் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ”கடவுளே, எல்லா நல்ல கதைகளையும் என்னிடமே அனுப்புகிறாயே. ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கண்டிப்பாக இந்தப் படம் வெற்றிபெறும். இந்தப் படத்தை ‘மாநாடு 2’ என சொல்லலாம். அப்படி ஒரு திரைக்கதை. இந்தப் படம் வெற்றிகளை குவிக்கும்” என தெரிவித்துள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>