சிறந்த ஆஸி. வீரராக ஸ்டார்க் தேர்வு

 

2021-ம் ஆண்டுக்கான சிறந்த ஆஸ்திரேலிய வீரராக மிட்செல் ஸ்டார்க்கும் வீராங்கனையாக ஆஷ்லி கார்டனரும் தேர்வாகியுள்ளார்கள்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்படுவார்கள். வீரர்கள், நடுவர்கள், பத்திரிகையாளர்கள் அடங்கிய ஒரு குழு இவ்விருதுகளுக்கான தகுதியான நபர்களைத் தேர்வு செய்யும்.

2021-ம் ஆண்டுக்கான சிறந்த ஆஸி. வீரராக வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தேர்வாகியுள்ளார். 2-ம் இடம் பிடித்த மிட்செல் மார்ஷை விடவும் ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்று இந்த விருதுக்குத் தேர்வாகியுள்ளார். ஸ்டார்க்குக்கு 107 வாக்குகளும் மூன்றாம் இடம் பிடித்த டிராவிஸ் ஹெட்டுக்கு 72 வாக்குகளும் கிடைத்தன. அதேபோல சிறந்த வீராங்கனையாக ஆல்ரவுண்டர் ஆஷ்லி கார்டனர் தேர்வாகியுள்ளார். மகளிர் ஆஷஸ் டெஸ்டின்போது இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 

சிறந்த டெஸ்ட் வீரராக டிராவிஸ் ஹெட்டும் சிறந்த ஒருநாள், டி20 வீரராக மிட்செல் மார்ஷும் தேர்வாகியுள்ளார்கள். மகளிர் பிரிவில் சிறந்த ஒருநாள் வீராங்கனையாக  அலிஷா ஹீலியும் சிறந்த டி20 வீராங்கனையாக பெத் மூனியும் தேர்வாகியுள்ளார்கள். 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>