‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படக்குழுவைப் பாராட்டிய கமல்ஹாசன்

சில நேரங்களில் சில மனிதர்கள் படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

நடிகர்கள் அசோக் செல்வன், மணிகண்டன், நாசர், அபிஹசன், ரித்விகா, ரியா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள். 

இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் கடந்த ஆம் தேதி வெளியானது. 4 பேரில் வாழ்க்கையும் ஒரு புள்ளியில் இணைவது போன்ற திரைக்கதையில் அமைக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை வெகுவாகப் பெற்றது.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பின் போது நடிகர்கள் மணிகண்டன், அசோக் செல்வன், ரித்விகா இயக்குநர் விஷால் வெங்கட் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ள நடிகர் அசோக் செல்வன், “மாணவர் ஆசிரியரை சந்தித்துள்ளேன். கடுமையான பணிகளுக்கு மத்தியில் திரைப்படக் குழுவை அழைத்துப் பாராட்டியதற்கு நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>