சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தை உறுதி செய்த இசையமைப்பாளர் தமன் !

‘டாக்டர்’ படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவர் தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, சூரி, ஆர்ஜே விஜய், ஷிவாங்கி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் சமீபத்தில் நிறைவு செய்தார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதையும் படிக்க | இயக்குநரும் நடிகருமான ஆர்.என்.ஆர் மனோகர் மாரடைப்பால் மரணம்

இதனையடுத்து தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘ஜதி ரத்னாலு’ பட இயக்குநர் அனுதீப் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. 

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது சுட்டுரைப் பக்கம் மூலம் இசையமைப்பாளர் தமனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தார். அந்தப் பதிவில் உங்களிடம் இருந்து ‘புட்ட பொம்மா’ பாடல் போன்று நிறையப் பாடல்கள் வெளியாக வாழ்த்துகள் என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க | ஆண் குழந்தைக்கு அம்மாவான பாரதி கண்ணம்மா வெண்பா: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து அறிவிப்பு

அதற்கு பதிலளித்த தமன், ”உங்கள் அன்பு நன்றி சகோதரா, பின்றோம், தட்றோம். எஸ்கே21” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் தமன் இணைவது உறுதியாகியுள்ளது.  
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>