சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் இருந்து வெளியான 'சோ பேபி' பாடல் விடியோ

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தில் இருந்து சோ பேபி என்ற பாடல் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 4 ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. 

இதையும் படிக்க | பிக்பாஸில் கமலிடம் வசமாக சிக்கிய பாவனி: என்ன முடிவெடுக்கப்போகிறார் ?

இந்தப் படத்துக்கு அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும் பெரும் பலமாக அமைந்திருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் செல்லம்மா என்ற பாடல் விடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து சோ பேபி பாடல் விடியோ தற்போது வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இந்தப் பாடலை, அனிருத் மற்றும் ஆனந்த கிருஷ்ணன் இணைந்து பாடியுள்ளனர். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>