சிவகார்த்திகேயனின் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்துக்கு கதாநாயகி இவரா?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து பிப்ரவரி மாதம் திரைக்கு வரவிருக்கிறது. டாக்டர் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இதனையடுத்து சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கில் வெற்றிபெற்ற ஜதி ரத்னாலு பட இயக்குநர் அனு தீப்புடன் இணையவிருக்கிறார். சிவகார்த்திகேயனின் 20வது படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். 

இதையும் படிக்க | ”விக்ரம் ஒரு நடிப்பு ராட்சசன்”: கோப்ரா பட புகைப்படங்களைப் பகிர்ந்த இயக்குநர்

இந்தப் படத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>