சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் படத்தில் இங்கிலாந்து நடிகை அவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டான் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் தற்போது அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்குடியில் சமீபத்தில் துவங்கியது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாண்டிச்சேரியிலும் இங்கிலாந்திலும் படமாக்கப்படவிருக்கிறதாம்.
இதையும் படிக்க | ஜெயம் ரவி நடிக்கும் ‘அகிலன்’: முதல் பார்வை போஸ்டர் இதோ
இந்த நிலையில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒலிவியா மோரிஸ் என்ற இங்கிலாந்து நடிகை நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது இயக்குநர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் பாண்டிச்சேரியில் துவங்கவிருக்கிறது. இயக்குநர் அனுதீப்பின் ஜதி ரத்னாலு படத்தைப் போலவே இந்தப் படமும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் உருவாகி வருகிறது.
.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–
–>