சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்': ஜி.வி.பிரகாஷ் – அனிருத் இணைந்து பாடிய பாடல் விடியோ

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இதையும் படிக்க | அஜித்தின் ‘வலிமை’ உருவான விதம் – வெளியான விடியோ

இந்தப் படத்தில் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்தப் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பாடலின் சில நிமிட காட்சி வெளியாகியுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>