சூர்யா – ஜோதிகா இணைந்து வெளியிட்ட துல்கர் சல்மான் பட போஸ்டர்

 

பிரபல நடன இயக்குநர் பிருந்தா ‘ஹே சினாமிகா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் நடிக்கின்றனர். 

ஜியோ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ப்ரீத்தா ஜெயராமன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மதன் கார்கி இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க | ‘வலிமை’ படத்தின் சென்சார் விவரம் வெளியானது

இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி திரைக்கு வர விருக்கிறது. தமிழில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை சூர்யா மற்றும் ஜோதிகா வெளியிட, தெலுங்கில் நாகர்ஜுனா மற்றும் அமலா வெளியிட்டுள்ளனர். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>