சூர்யா படத்தைக் கைப்பற்றிய உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக திரைப்படங்களை தயாரிப்பது, விநியோகிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த, அரண்மனை 3 படங்களை தமிழகத்தில் வெளியிட்டார். 

இந்த நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படத்தின் வெளியீட்டு உரிமையைும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

இதையும் படிக்க | மீண்டும் இணையும் இயக்குநர்கள் அமீர் – வெற்றிமாறன்: அதிகாரப்பூர்வ தகவல்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் வருகிற மார்ச் 10 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

வாரணம் ஆயிரம் படத்துக்கு பிறகு இந்தப் படத்தின் மூலம் சூர்யாவோடு ரத்னவேலு இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>