சூர்யா வெளியிட்ட 'கணம்' பட டீசர் இதோ – நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் அமலா!

 

டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கணம்’. இந்தப் படம் தெலுங்கில் ஒகே ஒக ஜீவிதம் என்ற பெயரில் உருவாகியுள்ளது. 

இந்தப் படத்தில் சர்வானந்த் நாயகனாக நடிக்க, நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை அமலா தமிழ் படத்தில் நடித்துள்ளார். மேலும் சதிஷ், ரமேஷ் திலக், நாசர், ரவி ராகவேந்திரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஸ்ரீகார்த்திக் இயக்கியுள்ளார். 

இதையும் படிக்க | ‘மன்னிக்கவும்’ – ‘மாநாடு’ படம் பற்றி இயக்குநர் செல்வராகவன் விமர்சனம்

இந்தப் படத்தின் டீசரை சூர்யா தற்போது வெளியிட்டுள்ளார். ‘இன்று நேற்று நாளை’, ’24’ படங்களைப் போல இந்தப் படமும் கால இயந்திரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>