செங்கல் செங்கல்லாக கெமிக்கல் சோப் எதற்கு? ஹோம்மேட் ‘நேச்சுரல் பாடி வாஷ்’ தயாரிக்க கத்துக்கோங்க பாஸ்!

0000_body_wash_1

குளிர்காலமோ, வெயில் காலமோ எந்தக் காலமாக இருந்தாலும் சிலருக்கு எந்த குளியல் சோப்பும் ஒத்துக் கொள்வதே இல்லை. அவர்களும் தொலைக்காட்சி விளம்பரங்களில் காட்டப்படும் அத்தனை நிறங்களிலான சோப்புகளையும் ஒன்று விடாமல் பயன்படுத்தி ஓய்ந்திருப்பார்கள். சிலர் கலர், கலராக சோப் எதற்கு என்று வெள்ளை நிற சோப்புக்கு மாறிய பின்னரும் கூட சருமம் என்னவோ அவர்களது ஆசைப்படி பளபளக்காமல் மேலும் பொலிவிழந்து வறண்டும், வெடித்தும் தோற்றமளிப்பதைக் கண்டு மனச்சோர்வில் வீழ்ந்திருப்பார்கள். அப்படிப் பட்டவர்கள்… சோப்போடு நிறுத்திக் கொள்வதில்லை. சோப்பில் கிடைக்காத சரும மென்மை மாய்ஸைரைஸைர்களில் கிடைக்கிறதா பார்க்கலாம் என பல்வேறு நிறங்களில் மாய்ஸ்ரைஸர்களைப் பயன்படுத்தி சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள முயன்று கொண்டிருப்பார்கள். ஒருநாள் இவற்றைப் பயன்படுத்த மறந்தாலும் போதும் சருமம் வறண்டும், சுருங்கியும், பாளம் பாளமாக வெடித்தும் காட்சியளித்து மானத்தை வாங்கும்.

இந்தத் தொல்லைகளை எல்லாம் தவிர்க்க வேண்டுமானால் கடைகளில் விற்கப்படும் விதம், விதமான செங்கக் கட்டிகளை தூக்கிக் கடாசி விட்டு நமக்கே, நமக்கேயான நேச்சுரல் பாடி வாஷை நாமே தயாரித்துக் கொள்வது ஒன்று தான் சிறந்த வழி. திரவ சோப்பின் சிறப்பு என்னவென்றால் அது சருமத்தோடு ஒட்டி உறவாடி பின் பிரிய மாட்டேன் என்று படிந்து சரும வறட்சிக்கு காரணமாவதில்லை. அதனால் தான் நட்சத்திர விடுதிகளில் பெரும்பாலும் திரவ சோப்களையே தங்கள் விருந்தினர்களுக்கு காம்ப்ளிமெண்ட்டரியாகத் தருகிறார்கள். சந்தேகமிருந்தால் திட சோப்கள் பயன்படுத்துவோர் சில வாரங்களுக்கு திரவ சோப்களைப் பயன்படுத்திப் பார்த்து விட்டு பிறகு தங்களுக்குத் தேவையான திரவ சோப் அல்லது பாடி வாஷை நேச்சுரலாக தாங்களே வீடுகளில் தயாரிக்க முயற்சி செய்யலாம். எப்படியாயினும் கெமிக்கல் சோப்களின் ஆதிக்கம் குறைந்து ஹோம்மேட் சோப்களின் கை வண்ணத்தில் அனைவரது சருமமும் விரும்பிய வண்ணம் பொலிவு பெற்றால் சரி தான்.

தேவையான பொருட்கள்:

 • தேங்காய் எண்ணெய்:  1/4 கப் 
 • தேன்: 1/4 கப்
 • லிக்விட் கேஸ்டைல் சோல் அல்லது திரவ சோப்: 1/2 கப்
 • விட்டமின் E: 1 டீஸ்பூன்
 • யூகலிப்டஸ் எஸன்சியல் ஆயில்: 15 துளிகள்
 • ஸ்வீட் ஆரஞ்சு எஸன்சியல் ஆயில்: 10 துளிகள்
 • லெமன் அல்லது நாரத்தை எஸன்சியல் ஆயில்: 10 துளிகள்
 • தேங்காய் எண்ணெயை விடச் சிறந்த பாடி மாய்ஸ்ரைஸர் உலகில் கிடையாது. மிகச்சிறந்த இயற்கை மாய்ஸ்ரைஸைரான தேங்காய் எண்ணெயில் சருமத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்தவிதமான பக்க விளைவுகளும் கிடையாது. சில கெமிக்கல் மாய்ஸ்ரைஸர்களைப் போல இது சருமத்துவாரங்களை அடைத்துக் கொள்ளாது. இதனால் உடலுக்கு கிடைக்கும் இயற்கை மணமும் அலாதியானதாக இருக்கும். 
 • தேன் எதற்கு என்றால்?  சருமத்திற்கு நோய்தொற்று எதிர்ப்பாற்றலை வழங்குவதில் தேன் முக்கிய பங்காற்றுகிறது. சருமத்தை ஊடுருவ நினைக்கும்/ சரும ஆரோக்யத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய நுண்ணுயிர்களுக்கு தேன் மிகப்பெரும் எதிரி.

 • திரவ சோப்… சிலருக்கு என்ன தான் இயற்கை முறையில் தயாரித்த சோப் பயன்படுத்தினாலும் கூட தேய்த்துக் குளிக்கும் போது நுரையில்லா விட்டால் திருப்தியே வராது. அந்த நுரை எஃபெக்ட்டை கொண்டு வர இந்த லிக்விட் கேஸ்டைல் சோப் என்று சொல்லப்படக் கூடிய திரவ சோப் வழங்கும்.
 • எஸன்சியல் ஆயில்கள்… நேச்சுரல் சோப் தயாரிக்கும் போது அதனுடன் இடுபொருட்களாக சிட்ரஸ், யூகலிப்டஸ் அல்லது லெமன் எஸன்சியல் ஆயில் இவற்றில் ஏதாவதொன்றை சேர்த்துக் கொள்வது சரும பளபளப்பு மற்றும் போஷாக்குக்கு உகந்தது. 

எனவே நேச்சுரல் குளியல் சோப் தயாரிக்கையில் மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் மறவாமல் சேர்க்க வேண்டும்.

தேன், தேங்காய் எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் மெடிக்கல் ஷாப் மற்றும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் பெற முடியும். விட்டமின் E ஸ்கின் ஸ்கேர் மெடிக்கல் ஷாப்களில் கிடைக்கும்.

நேச்சுரல் சோப் தயாரிப்பு முறை:

தேங்காய் எண்ணெயை ஒரு மைக்ரோவேவ் கப்பில் எடுத்துக் கொண்டு அவனை மீடியம் செட்டிங்கில் வைத்து உருக வைக்க வேண்டும். பின்னர் அதனுடன் நீங்கள் விரும்பும் எஸன்சியல் ஆயில் சில துளிகளுடன், சுத்தமான தேன் மற்றும் விட்டமின் E சேர்த்து நன்கு கலக்கவும். கலந்த பின்னர் அதனுடன் லிக்விட் கேஸ்டைல் சோப் அல்லது திரவ சோப் கலந்து நன்கு கலக்கி ஒரு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம்.
 

<!–

–>