செஞ்சூரியன் டெஸ்ட்: கே.எல் ராகுல் சதம், இந்தியா ரன் குவிப்பு

செஞ்சூரியன் டெஸ்டில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. 

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல் ராகுலும், மாயன்க் அகர்வாலும் களமிறங்கினர். இந்த ஜோடி தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சுலபமாக எதிர்கொண்டனர். 

இருவரும் அரைசதம் கடந்த நிலையில் மாயன்க் அகர்வால் 60 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து புஜாரா களம் கண்டார். ஆனால் அவர் முதல் பந்துலேயே டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி, ராகுலுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இருப்பினும் அவர் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அடுத்த வந்த ரஹானேவும் தன் பங்கிற்கு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்றொரு புறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் சதம் அடித்து அசத்தினார். இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. கேஎல் ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>