சென்னையில் தீபாவளி பட்டாசால் அதிகரித்த காற்று மாசு

தீபாவளி பட்டாசினால் சென்னையில் காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையொட்டி வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சென்னையின் பல்வேறு பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளித்தன. சாலைகளில் மாசுத்துகள்கள் அடர்த்தியாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

இந்நிலையில் சென்னையில் காற்று மாசுக்குறியீடு 385க்கும் அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 875 பேருக்கு கரோனா தொற்று

கடந்த சில தினங்களாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவந்த நிலையில் காற்றில் நிலவிவந்த அதிக ஈரத்தன்மை மற்றும் குறைந்த வேகம் காரணமாக காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசின் அளவு வழக்கத்தைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>