சென்னையில் நாளை (நவ.19) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக சென்னையில் நாளை (19.11.2021) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து 260 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்  நாளை காலை சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | ’பேசாமல் உட்காருங்க’: பிரிட்டன் பிரதமரை அடக்கிய அவைத்தலைவர்

இதன்காரணமாக சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தாழ்வு மண்டலம் கரையை கடந்த பிறகு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பிற்பகலுக்குப் பிறகு மழை குறையத் தொடங்கும்

இதன்காரணமாக சென்னையில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>