சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.19 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

துபையிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.19.98 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சுங்கத்துறையின் விமான நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, துபையிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையும் படிக்க | காஷ்மீர்: பயங்கரவாதிகளால் 2 காவலர்கள் சுட்டுக்கொலை

இந்நிலையில் துபை விமானத்தில் வந்த சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த ஹார்டிஸ்க்கை சோதனையிட்டதில் 459 கிராம் எடையுள்ள தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட இதன் மதிப்பு ரூ.19.98 லட்சம்.

இதையும் படிக்க | 59 நாடுகளுக்கு பரவிய ஒமைக்ரான் கரோனா தொற்று

இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சா்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>