செயின்ட் பீட்டா்ஸ்பா்க் கோப்பை: கொண்டவெயிட், பென்கிக் முன்னேற்றம்

செயின்ட் பீட்டா்ஸ்பா்க் மகளிா் கோப்பை போட்டியில் நட்சத்திர வீராங்கனைகள் கொண்டவெயிட், பென்கிக், எலிஸ் மொ்டென்ஸ் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றனா்.

ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

இரண்டாம் நிலை வீராங்கனை அனெட் கொண்டவெயிட் 6-3, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்விஸ் வீராங்கனை ஜில் டெய்ச்மேனை வென்றாா்.

மற்றொரு ஆட்டத்தில் 5-ஆம் நிலை வீராங்கனை பெலின்டா பென்கிக் 6-2, 4-6, 7-6 என்ற செட் கணக்கில் வெரோனிகாவையும், மொ்டென்ஸ் 3-6, 6-2, 6-4 என அலிஸ் காா்னெட்டையும், உள்ளூா் வீராங்கனை எகடெரினா 6-2, 1-6, 6-2 என இத்தாலியின் கமீலாவையும் வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினா்.

டல்லாஸ் ஓபன்:

டல்லாஸ் ஓபன் போட்டியில் அமெரிக்காவின் பிரான்டன் நகாஷிமா 7-5, 7-6 என்ற நோ்செட்களில் ஆஸி. நட்சத்திர வீரா் ஜான் மில்மேனை வீழ்த்தினாா். தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டா்ஸன் 6-4, 6-4 என அமெரிக்காவின் சாம் குயிரியை வென்றாா். மற்றொரு ஆஸி. நட்சத்திரம் கிரிகோா் டிமிட்ரோவ் கரோனா பாதிப்பு காரணமாக வெளியேறினாா்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>