செய்திகள் சில வரிகளில்…

 

தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ரயில்வே விளையாட்டு ஊக்குவிப்பு வாரியம் (ஆர்எஷ்பிபி) 5 தங்கம், 6 வெள்ளி, 1 வெண்கலம் என 12 பதக்கங்களுடன் சாம்பியன் பட்டம் வென்றது. போட்டியில் சிறந்த வீராங்கனையாக 52 கிலோ பிரிவைச் சேர்ந்த நிகத் ஜரீன் தேர்வானார். 

தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்ரீஹரி நட்ராஜ் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் 49.94 விநாடிகளிலும், குஷாக்ரா ராவத் 800 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் 8 நிமிஷம் 9.47 விநாடிகளிலும் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தனர். 

ஐசிசியின் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி ஓரிடம் சறுக்கி 4-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 2 இடங்கள் சறுக்கி 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 

நவம்பர் முதல் வாரத்தில் சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை போட்டி தொடங்க இருக்கும் நிலையில், மும்பை அணியைச் சேர்ந்த 4 வீரர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>