செல்போன் பறிக்க முயன்றவர்களிடம் மல்லுக்கட்டிய பிரபல நடிகை: தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் கசு பிரம்மானந்தா ரெட்டி தேசிய பூங்காவில் இரவு 8.30 மணியளவில் நடிகை ஷாலு சௌரசியா நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் இருவர் அவரிடம் பணம், மொபைல் போன் உள்ளிட்டவற்றை அளிக்குமாறு மிரட்டியிருக்கின்றனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, அவரை தாக்கியுள்ளனர். 

இதையும் படிக்க | பிரபல கதாநாயகன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் சமந்தா

இதில் நடிகை ஷாலுவுக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரிடம் இருந்து செல்போனை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

பிரபல நடிகையிடம் செல்போன் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பஞ்சாரா ஹில்ஸ் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  நடிகை ஷாலு தமிழில் ‘என் காதலி சீன் போடுறா’ படத்தில் நடித்துள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>