செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆன தமிழகத்தின் 14 வயது பரத் சுப்ரமணியம்

 

சென்னையைச் சேர்ந்த 14 வது பரத் சுப்ரமணியம், செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆகியுள்ளார்.

இத்தாலியில் நடைபெற்ற வெர்கானி கோப்பை செஸ் போட்டியில் கலந்துகொண்ட பரத் சுப்ரமணியம், 6.5 புள்ளிகளுடன் 7-ம் இடம் பெற்றார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான மூன்றாவது தகுதியையும் இப்போட்டியின் முடிவில் அடைந்தார். 2500 எ.எல்.ஓ. புள்ளிகளை அடைந்ததால் இந்தியாவின் 73-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆகியுள்ளார் பரத் சுப்ரமணியம்.

இத்தாலி போட்டியில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய கிராண்ட்மாஸ்டரான லலித் பாபு, டை பிரேக்கர் மூலமாக போட்டியை வென்றார்.     

தமிழ்நாடு செஸ் சம்மேளனத்தின் இணையத்தளத்தில் உள்ள தகவலின்படி பரத் சுப்ரமணியம், தமிழ்நாட்டின் 25-வது கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இந்தியாவில் உள்ள 73 கிராண்ட்மாஸ்டர்களில் 25 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அந்தளவுக்கு இந்திய செஸ்ஸில் தமிழகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>