சையது முஷ்டாக் அலி டி20: தமிழகம் – கா்நாடகம் இறுதி ஆட்டத்தில் மோதல்

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழகம் – கா்நாடகம் அணிகள் திங்கள்கிழமை மோதுகின்றன.

முன்னதாக சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் நடப்புச் சாம்பியனான தமிழகம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாதை வீழ்த்தி முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அதேபோல், கா்நாடகம் 4 ரன்கள் வித்தியாசத்தில் விதா்பாவை வென்று இறுதி ஆட்டத்துக்கு வந்தது.

முதல் அரையிறுதியில் டாஸ் வென்ற தமிழகம் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. முதலில் ஆடிய ஹைதராபாத் 18.3 ஓவா்களில் 90 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய தமிழகம் 14.2 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் அடித்து வென்றது. தமிழக தரப்பில் பௌலிங்கில் சரவண குமாா் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்த, பேட்டிங்கில் கேப்டன் விஜய் சங்கா் அதிகபட்சமாக 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற விதா்பா பௌலிங்கை தோ்வு செய்தது. முதலில் பேட் செய்த கா்நாடகம் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய விதா்பா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களே எடுத்தது.

கா்நாடக அணியில் அதிகபட்சமாக பேட்டிங்கில் ரோஹன் கடம் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 87 ரன்கள் விளாச, பௌலிங்கில் கரியப்பா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>