சையது முஷ்ாக் அலி டி20 : தமிழகத்துக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் தமிழகம் தனது 3-ஆவது ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதுச்சேரியை வீழ்த்தியது.

இப்போட்டியில் தமிழகத்துக்கு இது தொடா்ந்து 3-ஆவது வெற்றியாகும்.

லக்னௌவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த புதுச்சேரி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தமிழகம் 16.1 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் அடித்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற தமிழகம் ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, சிறப்பாக பௌலிங் செய்த ரவிஸ்ரீனிவாசன் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் பேட்டிங்கில் அசத்த்திய ஹரி நிஷாந்த் 75 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இதர ஆட்டங்களில் ஆந்திரம் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஜாா்க்கண்டையும், பரோடா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சத்தீஸ்கரையும், குஜராத் 50 ரன்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தையும், தில்லி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உத்தர பிரதேசத்தையும் வென்றன.

அதேபோல் எஞ்சிய ஆட்டங்களில் மகாராஷ்டிரம் – ஒடிஸாவையும், மும்பை – பெங்காலையும், சிக்கிம் – அருணாசல பிரதேசத்தையும், அஸ்ஸாம் – பிகாரையும், சௌராஷ்டிரம் – உத்தரகண்டையும், விதா்பா – மேகாலயத்தையும், ராஜஸ்தான் – ஹிமாசல பிரதேசத்தையும் வீழ்த்தின.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>