சையத் முஷ்டாக் அலி டி20: மீண்டும் அசத்தி வரும் தமிழக வீரர் சாய் கிஷோர்

 

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் தமிழக வீரர் சாய் கிஷோர் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார். 

25 வயது சாய் கிஷோர், கடந்த வருட சையத் முஷ்டாக் அலி போட்டியில் தமிழக அணி கோப்பையை வெல்ல பெரிதும் உதவினார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர், மிகக்குறைவான ரன்கள் கொடுத்து அசத்தினார். விளையாடிய 8 ஆட்டங்களிலும் அவருடைய பந்துவீச்சு தமிழக அணிக்குப் பெரிதும் உதவியது. முக்கியமாக பவர்பிளே ஓவர்களில் இவருடைய பந்துவீச்சு எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்து அதிக ரன்களை எடுக்க முடியாத சூழலை உருவாக்கியது. சையத் முஷ்டாக் அலி போட்டியின் இறுதிச்சுற்றில் விக்கெட்டுகள் எடுக்காமல் போனாலும் 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 8 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகள் எடுத்தார். எகானமி – 4.82. நாக் அவுட் ஆட்டங்களில் சாய் கிஷோரின் பந்துகளில் எதிரணி வீரர்கள் ரன்கள் எடுக்க முடியாமல் திணறினார்கள். 

2019 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு சாய் கிஷோரைத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. எனினும் இதுவரை ஒரு வாய்ப்பு கூட சாய் கிஷோருக்கு வழங்கப்படவில்லை. 

இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்குத் தேர்வானார் சாய் கிஷோர். மாற்று வீரராக இந்திய அணியில் இடம்பிடித்து இலங்கைக்குச் சென்ற சாய் கிஷோர், இந்திய அணியில் பிறகு இடம்பிடித்தார். 

இந்நிலையில் இந்த வருட சையத் முஷ்டாக் அலி போட்டியிலும் சாய் கிஷோர் அசத்தி வருகிறார். இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். புதுச்சேரிக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ஐபிஎல் ஏலத்தில் சாய் கிஷோரைத் தேர்வு செய்ய அணிகள் ஆர்வமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சையத் முஷ்டாக் அலி கோப்பை 2021: சாய் கிஷோர்

4-0-29-1
4-0-32-0
4-0-28-4 (ஹாட்ரிக்)
4-0-23-0

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>