'சோகம் என்னன்னா…': 'பீஸ்ட்' படம் எப்படி இருக்கும்? பூஜா ஹெக்டே விடியோ மூலம் தகவல்

 

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

முதன்முறையாக இந்தப் படத்தில் நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அல வைக்குந்தபுரமுலோ படத்தில் அல்லு அர்ஜுனுடன் இவர் நடனமாடிய புட்ட பொம்மா பாடல் மூலம் தேசிய அளவில் பிரபலமாகியிருக்கிறார். 

இதையும் படிக்க | நடக்கப்போவது முன்பே தெரிந்தால்?: ‘க்’ – திரைப்பட விமர்சனம்

இந்த நிலையில் சன் டிவி தனது யூடியூப் பக்கத்தில் பூஜா ஹெக்டே பேசிய விடியோவை பகிர்ந்துள்ளது. அதில், பீஸ்ட் படத்தில் நடித்த நல்ல அனுபவம். இந்தப் படம் உருவாகும்போது நிறைய சிரித்தோம். நீங்களும் இந்தப் படம் பார்க்கும்போது நன்றாக சிரிப்பீர்கள். சிறந்த பொழுதுபோக்கு படமாக பீஸ்ட் இருக்கும். இந்தப் படம் இயக்குநர் நெல்சன் மற்றும் விஜய் பாணியிலான படமாக இருக்கும். 

இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்டது சுற்றுலா சென்றது போல இருந்தது. சோகம் என்னவென்றால் இன்று என்னுடைய கடைசி நாள். திரையரங்கில் சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>