ஜனவரியில் வலிமையுடன் இயக்குநர் வினோத்தின் மற்றொரு படமும் வெளியாகிறது!

 

இயக்குநரும் நடிகருமான மனோபாலா தயாரித்த சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வினோத். சதுரங்க வேட்டை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

தொடர்ந்து கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை வினோத் இயக்கினார். இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை மூலம் அஜித்துடன் இணைந்தார்.  

இதையும் படிக்க | ’மின்னல் முரளி’ புதிய சாதனை

அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. தற்போது அஜித்துடன் அவர் இணைந்துள்ள வலிமை திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. மூன்றாவது முறையாக அஜித்துடன் ஒரு படத்தில் வினோத் இணையவுள்ளார். 

இந்த நிலையில் சதுரங்க வேட்டை படத்தின் 2 ஆம் பாகத்துக்கு கதை மற்றும் திரைக்கதையை வினோத் எழுதியுள்ளார். இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, திரிஷா இணைந்து நடித்துள்ளனர். சலீம் பட இயக்குநர் நிர்மல் குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

பொருளாதார சிக்கல் காரணமாக இந்தப் படம் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, ஜனவரி 26 ஆம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>