ஜன்னல் வைத்த ஜாக்கெட் எல்லாம் பழசு! இதுதான் புதுசு!

இந்தியப் பெண்கள் என்றாலே உலக மக்கள் வியக்கும் பல விஷயங்களில் ஒன்று நம் பெண்கள் அணியும் புடவை. அதை எப்படித்தான் கட்டுகிறார்களோ என்று ஒருகாலத்தில் வெளிநாட்டினர் வியந்து கொண்டிருந்தனர். இன்றைய நிலையில் நம் நாட்டுப் பெண்களே அப்படி சொல்லும்படியாகிவிட்டது.

வெஸ்டர்ன் ட்ரெண்டில் போய்க்கொண்டிருக்கும் இளசுகள் பண்டிகை, அல்லது திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்குப் போகும் போது இன்னும் புடவைகளில் வலம் வருவது மனத்துக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயம். 

சேலைக்கு ஏன் இளம் பெண்கள் நோ சொல்கிறார்கள் என்று கேட்ட போது அதற்கு ஜாக்கெட், பாவடை என மேட்சிங்காக தேர்ந்தெடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. மேலும் அந்த ஜாக்கெட்டை தைத்து அணிவதற்குள் பொறுமை போய்விடும். ஒருவருக்கு எல்லா உறவுகளும் வாழ்க்கையில் சரியாக அமைந்துவிட்டாலும், ஒரு சரியான டெய்லர் அமையவில்லையெனில் கஷ்டம்தான். பெண்களைப் பொருத்தவரையில் டெய்லர்கள் அன்றாடம் சந்திக்கக் கூடிய ஒரு முக்கிய நபர்களாகிவிட்டனர். 

மேட்சிங் ப்ளவுஸ் வாங்கி தைத்தாகிவிட்டது.  எந்தந்த புடவைக்கு எப்படிப்பட்ட ஜாக்கெட் அணியலாம் என்ற ஜென்ரல் நாலெட்ஜ் இருந்தால் சேலை ஸ்பெஷிலிஸ்ட் ஆகிவிடலாம்.

ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட்

முழு நீளக் கை வைத்து ஜாக்கெட் தைப்பது பழைய கால பேஷன் என்று நீங்கள் சொல்ல முடியாது. காரணம் இப்போது இதுதான் லேட்டஸ்ட் ரசனை.

லேஸ் வைத்து தைக்கப்பட்ட ஜாக்கெட்டுகள் அழகாகவும் இன்றைய யுவதிகளின் சாய்ஸாகவும் உள்ளது.

ஃபுல் நெக்லைன் ஜாக்கெட்

முக்கால் கை ஜாக்கெட் என்று இதனைச் சொல்வார்கள்.

இதில் கழுத்துப் பகுதி மேலே ஏறி இருக்கும். நெக் டிசைன் அதற்கேற்ற வகையில் தேர்ந்தெடுத்து தைத்துப் போட்டால் அழகாக இருக்கும்.

பஃப் ஜாக்கெட்

அந்த நாள் முதல் இந்த நாள் வரை பெண்கள் விரும்புவது பஃப் கை ஜாக்கெட்தான்.  

இது விதம் விதமாக டிசைன்களில் கிடைக்கிறது. ஸ்டைலிஷ் மற்றும் ட்ரெண்டியாக இந்த ஜாக்கெட்டை அணியலாம்.

டபுள் கலர் ஜாக்கெட்

இது இரட்டை நிறங்கள் கலந்தவாறான ஜாக்கெட். அந்தந்த புடவைக்கு ஏற்றபடி கலர் மேட்ச் செய்து தைக்கப்படும்.

இந்த ஜாக்கெட் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட புடவைக்கு பொருத்தமாக இருக்கும்.

இன்வர்டட் ஏ  ஜாக்கெட்

முன்பெல்லாம் லோ நெக் ஜாக்கெட் அணிந்த பெண்களைப் பார்க்கலாம். இப்போது நோ நெக் என்பதுதான் ஃபேஷன் போலும்.

அதாவது முதுகுப்புறத்தை பெரும்பான்மையாக ஃப்ரீயாக விடுவதுதான். இதில் இன்வர்டட் ஏ, வி நெக், டீப் யூ, ஷீர் டைப் என பலவகையில் உள்ளது. 

ஹை நெக் ஜாக்கெட்

கழுத்து வரை இழுத்து போர்த்தி தைக்கப்படும் அழகான சிம்பிள் ஜாக்கெட் இது. 

போட் நெக் ஜாக்கெட்

உங்கள் டெய்லரிடம் சொன்னால் அந்த டிசைனில் ஜாக்கெட் தைத்து தருவார்கள்.

புடவையின் லுக்கை இந்த ஜாக்கெட் மாற்றிக் காண்பிக்கும். ரிச் லுக் கொடுக்கும் ஜாக்கெட் இது. 

க்ளிட்டரிங் ஜாக்கெட்

இதுவும் லேட்டஸ்ட் ஃபேஷன்தான். கல்லூரி அல்லது பள்ளி ஃபேர்வெல் பார்டிகளுக்கு டீன் ஏஜ் பெண்கள் இதையே விரும்பி அணிகிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம்.

இந்த ஜாக்கெட்டில் சம்கி, மிர்ரர் வொர்க் கலந்து தைக்கலாம். பொதுவாக ஜிகு ஜிகுவென அழகிய நிறங்களில் மின்னும் ஜாக்கெட் இது. 

சோளி ஸ்டைல் ஜாக்கெட்

இந்த ஜாக்கெட் மிகவும் எளிமையாக இருக்கும். 

பாரம்பரிய சேலைகளை அணியும் போது இந்த வகை ஜாக்கெட்டுகளை விரும்பி அணிகிறார்கள் இன்றைய யுவதிகள்.

கோல்டன் மற்றும் ரெட் கலர் ஜாக்கெட்

கோல்டன் கலர் புடவை, மற்றும் ஹாஃப் வொயிட் சேலைகளுக்கு, இந்த சிவப்பும் தங்க நிறமும் கலந்த ஜாக்கெட் பொருத்தமாக இருக்கும். பண்டிகை தினங்களில் அணிய ஏற்றது.

<!–

–>