ஜி.வி.பிரகாஷின் 'பேச்சிலர்’ திரைப்பட டிரைலர் வெளியீடு

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ள பேச்சிலர் திரைப்படத்தின் டிரைலர் திங்கள்கிழமை வெளியானது.

இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ள பேச்சிலர் திரைப்படத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை திவ்ய பாரதி நடித்துள்ளார்.

இதையும் படிக்க | கமல்ஹாசன் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம்

திரைப்படத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில் நீண்ட நாள்களாக வெளியிடப்படாமல் இருந்தது. இந்தத் திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் டிரைலரை வெளியிட்டனர்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>