ஜி.வி.பிரகாஷ் இசையில் புத்தம் புது காலை விடியாதா பாடல் வெளியானது

தமிழின் 5 இயக்குநர்கள் இயக்கிய குறும்படங்களின் தொகுப்பான புத்தம் புது காலை விடியாதா பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான புத்தம் புது காலை படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இதையும் படிக்க | இசையமைப்பாளர் தமனுக்கு கரோனா

இதனை இயக்குநர்கள் ஹலிதா ஷமீம், பாலாஜி மோகன், ரிச்சர்டு ஆண்டனி, சூர்ய கிருஷ்ணா, மதுமிதா ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்தத் தொடரில் நதியா, ஜோஜு ஜார்ஜ், ரித்திகா, கௌரி கிஷன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, டிஜே அருணாச்சலம், லிஜோ மோல் ஜோஸ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷின் இசையில் இந்தப் படத்தின் முகப்பு பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கபேர் வாசுகி எழுதியுள்ள இந்தப் பாடலை ஜ.வி.பிரகாஷ் குமார், யாமினி கன்டசாலா இணைந்து பாடியுள்ளனர். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>