ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ள 'நாய் சேகர்' பட பாடலை வெளியிடும் கார்த்தி

நகைச்சுவை நடிகர் சதிஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘நாய் சேகர்’. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறது. 

இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இந்தப் படத்தின் புதிய பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதையும் படிக்க | நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபல ஹீரோ படத்துக்கு இசையமைக்கும் ஹாரிஸ்

அஜீஸ் இசையில் நைன்டிஸ் கிட் எனத் துவங்கும் இந்தப் பாடலை இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இந்தப் பாடலை கிஷோர் ராஜ்குமார் எழுதியுள்ளார். இந்தப் பாடலை இன்று மாலை 5 மணிக்கு நடிகர் கார்த்தி வெளியிடுகிறார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>