'ஜெயில்’ டீசர் வெளியீடு

ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவான ‘ஜெயில்’ திரைப்படத்தின் டீசர்  வெளியாகிறது.

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜெயில்’. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இப்படம் சில பிரச்னைகளை சந்தித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ‘ஜெயில்’ வெளியீட்டு உரிமையை ஸ்டூடியோ கிரின் நிறுவனம் பெற்றது.

இதனால் அதன் வெளியீடு உறுதியானதைத் தொடர்ந்து தற்போது அப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டிருக்கிறார்கள்.

வடசென்னையை களமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் ஜி.வி பிரகாஷுடன் அபர்நதி , ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>