ஜெய்பீம் திரைப்படத்தின் ‘செண்டுமல்லி’ பாடல் வெளியீடு

நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் ’ஜெய் பீம்’ திரைப்படத்தின் ‘செண்டுமல்லியா மணக்குற நீ’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிக்க | ரஜினிகாந்த்தின் அண்ணாத்த டிரெய்லர் வெளியானது !

நடிகர் சூர்யா தன்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து நடித்துள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ‘செண்டுமல்லி’ எனத் தொடங்கும் பாடலைப் படக்குழுவினர் புதன்கிழமை வெளியிட்டனர். பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ள இந்தப் பாடலை பாடகர்கள் அனந்து, கல்யாணி நாயர் ஆகியோர் பாடியுள்ளனர்.

முன்னதாக ஜெய்பீம் திரைப்படத்தின் ‘பவர்’, ‘தலைக்கோதும்’ ஆகிய பாடல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | ‘ஜெயில்’ டீசர் வெளியீடு

’ஜெய் பீம்’ படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்க, நடிகர் சூர்யா வழக்கறிஞராக சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>