'ஜெய் பீம்' படத்தால் மீண்டும் மொழி பிரச்னை : ஹிந்தி பேசுபவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே மோதல்

நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். 

இந்தப் படத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் ஒரு விசாரணைக் காட்சியில் காவல்துறை அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ், நகை அடகுக் கடை வைத்திருப்பவரிடம் விசாரணை நடத்துவார். அப்போது அந்த நகை அடகுக் கடை உரிமையாளர் ஹிந்தியில் பதில் சொல்வார். அதற்கு அவரது கன்னத்தில் அறையும் பிரகாஷ் ராஜ், தமிழில் பேசும்படி சொல்வார். 

இதையும் படிக்க | ஜெய் பீம் நிஜ நாயகன் நீதிபதி சந்துரு!

இந்தக் காட்சி தெலுங்கில் தெலுங்கு பேசு என சொல்வதாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஹிந்தியில் இந்த காட்சி உண்மையை பேசு என்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தக் காட்சிக்கு சில வட இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிரகாஷ் ராஜ் தமிழ் பேசு என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அடித்திருக்க தேவையில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தற்போது டிரெண்டாகி வருகிறது. 

இதனையடுத்து அதற்கு பதிலளிக்கும் விதமாக ஒரு சிலர் ஸ்கேம் 1992 ஹிந்தி படத்தில் தமிழ் பேசும் ஒருவரை ஹிந்தி தெரியாதா என கேட்பது போல் காட்டப்பட்டிருக்கிறது அதற்கு என்ன சொல்கிறீர்கள் என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>