'ஜெய் பீம்' படம் குறித்து ஹெச்.ராஜாவின் விமர்சனம்: சூர்யா பதில் என்ன தெரியுமா?: ரசிகர்கள் நெகிழ்ச்சி

சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் அமேசாம் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி நேர்மறையான விமர்சனங்களை குவித்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் ஜெய் பீம் படத்தைப் பார்த்து பாராட்டி வருகின்றனர். 

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். மேலும் மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், எம்.எஸ்.பாஸ்கர், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ், தமிழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இதையும் படிக்க | விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை தாக்க முயற்சி – வைரலாகும் விடியோ 

இந்த நிலையில் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் போஸ்டரை பகிர்ந்து, நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்துகொள்வோம் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் அவரது ட்வீட்டை சூர்யா லைக் செய்துள்ளார். 

விருப்பத்தின் பேரில் ஒரு படம் பார்ப்பதற்கும், ஒரு மொழியை பாடத்திட்டம் என்ற பெயரில் வலிந்து திணிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என சூர்யா ரசிகர்கள் எச்.ராஜாவுக்கு பதிலளித்து வருகின்றனர்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>