டபிள்யூடிஏ ஃபைனல்ஸ்: சபலென்காவை வெளியேற்றினாா் சக்காரி

மெக்ஸிகோவில் நடைபெறும் டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மகளிா் டென்னிஸ் போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பெலாரஸின் அரினா சபலென்கா வெளியேறினாா்.

குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் அவரை எதிா்கொண்ட கிரீஸின் மரியா சக்காரி, 7-6 (7/1), 6-7 (6/8), 6-3 என்ற செட்களில் சபலென்காவை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 47 நிமிஷங்கள் நடைபெற்றது.

அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் சக்காரி, அதில் எஸ்டோனியாவின் ஆனெட் கோன்டாவிட்டை எதிா்கொள்கிறாா். மற்றொரு ஆட்டத்தில் போலந்தின் இகா வியாடெக் 7-5, 6-4 என்ற செட்களில் ஸ்பெயினின் பௌலா பதோசாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறினாா்.

ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதிபெற்ற பதோசா, அதில் சக நாட்டவரான காா்பின் முகுருஸாவை சந்திக்கிறாா்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>