டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

saffron_kahwa4

கோப்புப்படம்

சாக்லேட் என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றுதான் பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், எல்லா வகையான சாக்லேட்டுகளும் நன்மையளிக்காது. 

சாக்லேட்டுகளில் உள்ள கோகோ எனும் பொருள் தான் அதன் சுவைக்கும், நலத்துக்கும் காரணமான ஒன்று. பல சாக்லேட்டுகளில் ரசாயனம் கலக்கப்படுகிறது. 

இந்நிலையில், ரசாயனம் கலக்காத கோகோ வேதிப்பொருள் அதிகமுள்ள டார்க் சாக்லேட்டுகள் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். 

► டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் சருமம் பளபளப்பாகிறது. 

► இதயக்கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. குறிப்பாக மாரடைப்பைத் தடுக்கிறது. 

► ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. 

► உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கிறது. 

► கொழுப்புகள் கரைவதாலும், சாக்லேட் சாப்பிடுவதால் மற்ற உணவுகளைக் குறைவாக எடுத்துக்கொள்வதால் உடல் எடை குறைகிறது. 

► உடல்நலத்தை மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

► முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பிரகாசிக்க உதவுகிறது. 

► இளமைத் தன்மைக்கு சாக்லேட்டில் உள்ள கோகோ எனும் பொருள் காரணமாக உள்ளது. 

► மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது. மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளவர்கள் சாக்லேட் சாப்பிட மனநிலை சீராகும் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். 

<!–

–>