டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர்: ஐசிசி பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்த மயங்க் அகர்வால்

 

டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஆடவர் பிரிவில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் இடம்பெற்றுள்ளார்.

மாதத்தின் சிறந்த வீரா்/வீராங்கனை என்கிற பெயரில் புதிய விருதை அறிமுகம் செய்துள்ளது ஐசிசி. சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரா், வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. தங்களுக்கு விருப்பமான வீரா், வீராங்கனைகளுக்கு அந்த விருது கிடைக்கச் செய்யும் வகையில் ரசிகா்கள் ஆன்லைன் மூலமாக வாக்குகளை செலுத்தலாம். முன்னாள் வீரா்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், பத்திரிகையாளா்கள் ஆகியோா் அடங்கிய ஐசிசியின் வாக்கு செலுத்துதல் அகாதெமியும், ரசிகா்களுடன் இதில் இணைந்து செயல்படுவார்கள். விருதுக்கு தகுதியான நபா்கள், களத்தில் செயல்பட்டது, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் வெளிப்படுத்திய ஆட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐசிசியின் விருதுகள் பரிந்துரை குழுவால் தீா்மானிக்கப்படுவாா்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் இடம்பெற்றுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக சதமடித்த இந்தியாவின் மயங்க் அகர்வால், இந்தியாவுக்கு எதிரான மும்பை டெஸ்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்த நியூசிலாந்தின் அஜாஸ் படேல், ஆஷஸ் தொடரில் 3 டெஸ்டுகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி 117 ரன்கள் எடுத்த ஆஸி. வீரர் ஸ்டார்க் ஆகியோர் டிசம்பர் மாதத்துக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்கள். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>