டிசம்பர் மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரரை அறிவித்த ஐசிசி

 

ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரா்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டு வருகிறது. இதன்படி கடந்த 2021 டிசம்பா் மாதத்தில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. 

பரிந்துரைப் பட்டியலில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் இடம்பெற்றார். நியூசிலாந்துக்கு எதிராக சதமடித்த இந்தியாவின் மயங்க் அகர்வால், இந்தியாவுக்கு எதிரான மும்பை டெஸ்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்த நியூசிலாந்தின் அஜாஸ் படேல், ஆஷஸ் தொடரில் 3 டெஸ்டுகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி 117 ரன்கள் எடுத்த ஆஸி. வீரர் ஸ்டார்க் ஆகியோர் டிசம்பர் மாதத்துக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்தார்கள்.

இந்நிலையில் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த அஜாஸ் படேலை, டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரராக ஐசிசி அறிவித்துள்ளது.

மும்பை டெஸ்டில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் ஒரு இன்னிங்ஸில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் எடுத்து சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் ஜிம் லேகர், அனில் கும்ப்ளேவுக்கு அடுத்ததாக 10 விக்கெட்டுகள் எடுத்த 3-வது பந்துவீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றார். மும்பையில் பிறந்து வளர்ந்தவர் அஜாஸ் படேல். அவருடைய பெற்றோர், உறவினர்கள் மும்பையில் வசிக்கிறார்கள். தன் சொந்த மண்ணில் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை நிகழ்த்தினார். அஜாஸ் படேல், முதல் இரு நாள்களில் 10 விக்கெட்டுகளையும் எடுத்தது பெரிய சாதனை. ஜிம் லேகர், அனில் கும்ப்ளே ஆகிய இருவரும் கடைசி நாள்களில் தான் 10 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். வெளிநாட்டு டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் எடுத்த முதல் பந்துவீச்சாளர், அஜாஸ் படேல். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>