டி வில்லியர்ஸ் ஓய்வுக்கு விடியோ; கிழித்துத் தொங்கவிடும் ரசிகர்கள்: அவானாவுக்கு இதெல்லாம் தேவையா?

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வுக்கு வாழ்த்து கூறுவதாக அவரை போல்டாக்கிய விடியோவை பதிவிட்ட பர்விந்தர் அவானாவை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்ற டி வில்லியர்ஸ், அனைத்து ரக கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார். கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வந்ததால், இந்தியர்களிடையே மிகுந்த ஏமாற்றம் தென்பட்டது.

இதையும் படிக்கபிரபல வீரர் டி வில்லியர்ஸ் ஓய்வு அறிவிப்பு

இதையடுத்து, அவருக்கு வாழ்த்துகள் குவியத் தொடங்கின. இதன் பகுதியாக இந்திய கிரிக்கெட் வீரர் பர்விந்தர் அவானாவும் டி வில்லியர்ஸ் ஓய்வுக்கு வாழ்த்து கூறுவதாக நினைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரை ஒருமுறை போல்டாக்கிய விடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துவிட்டார். முடிந்தது கதை.

டி வில்லியர்ஸின் புகைப்படங்கள், விடியோக்கள் எத்தனையோ இருந்தும் ஓய்வு பெறக்கூடிய தருணத்தில் இதுபோன்ற விடியோவை பதிவேற்றம் செய்வதா என்கிற எண்ணத்தில் அந்தப் பதிவின் கீழ் ரசிகர்கள் கடும் விமர்சனங்களைக் கொட்டி வருகின்றனர்.

குறிப்பாக ஐபிஎல் கிரிக்கெட்டில் அவானா ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா ஒருமுறை 33 ரன்கள் விளாசிய தருணத்தைக் குறிப்பிட்டு தமிழ் ரசிகர்கள் தங்களது எதிர்ப்புகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>