டெஸ்ட்: அதிக ரன்களைக் குவித்து வரும் இலங்கை வீரர்

 

காலேவில் இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நடைபெற்று வருகிறது.

4-வது நாளில் மே.இ. தீவுகள் அணி வெற்றி பெற 348 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முதல் இன்னிங்ஸில் கேப்டன் திமுத் கருணாரத்னே 147 ரன்கள் எடுத்தார். 2-வது இன்னிங்ஸில் 104 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் கடந்த 6 இன்னிங்ஸிலும் அரை சதமெடுத்து அதிக ரன்களைக் குவித்து வருகிறார். 

33 வயது கருணாரத்னே, 72 டெஸ்டுகளில் விளையாடி 12 சதங்களுடன் 5176 ரன்கள் எடுத்துள்ளார்.

மார்ச் மாதம் முதல் இதுவரை டெஸ்டில் விளையாடிய 6 இன்னிங்ஸிலும் ஒவ்வொரு முறையும் அதிக ரன்களைக் குவித்து கவனம் ஈர்த்து வருகிறார் கருணாரத்னே. இந்த 6 இன்னிங்ஸில் ஒரு இரட்டைச் சதமும் 2 சதங்களும் 3 அரை சதங்களும் எடுத்துள்ளார்.

திமுத் கருணாரத்னே: டெஸ்டில் கடைசி 6 இன்னிங்ஸில் எடுத்த ரன்கள்

75 vs மே.இ. தீவுகள் 
244 vs வங்கதேசம் 
118 vs வங்கதேசம் 
66 vs வங்கதேசம் 
147 vs மே.இ. தீவுகள்
83 vs மே.இ. தீவுகள்

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>