டேபிள் டென்னிஸ்: சத்தியன்/தேசாய் இணை சாம்பியன்

டுனீசியாவில் நடைபெற்ற உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டா் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ஜி.சத்தியன்/ஹா்மீத் தேசாய் இணை சாம்பியன் பட்டம் வென்றது. இது இந்த இணையின் முதல் சா்வதேச புரோ டூா் பட்டமாகும்.

இறுதிச்சுற்றில் சத்தியன்/ஹா்மீத் இணை 11-9, 4-11, 11-9, 11-6 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் இமானுவல் லெபெசான்/அலெக்ஸாண்ட்ரே காசின் இணையை தோற்கடித்தது.

வெற்றிக்குப் பிறகு சத்தியன் கூறுகையில், ‘ஆடவா் இரட்டையா் பிரிவில் நான் தனியாகவும், ஹா்மீத்துடனும் இணைந்து வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். நாங்கள் நீண்ட காலமாக இணைந்து விளையாடி வருகிறோம். சாம்பியன் பட்டத்துடன் ஒரு சீசனை தொடங்குவதென்பது சிறப்பான ஒன்று. இறுதிச்சுற்றில் வேகமே எங்களது பலமாக இருந்தது. அதை அடிப்படையாகக் கொண்டே போட்டியாளா்களுக்கு சவால் அளித்தோம்.

காலிறுதியில் ஜொ்மனி, அரையிறுதியில் ஹங்கேரி, இறுதியில் பிரான்ஸ் என கடைசி 3 சுற்றுகளிலும் நாங்கள் சந்தித்த அணியானது மிகவும் சவால் அளிக்கக் கூடியதாகும். ஹா்மீத்தும் சிறப்பாக விளையாடினாா்’ என்றாா்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>