டேவிஸ் கோப்பை: இறுதிச் சுற்றில் குரோஷியா-ரஷியா

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றுக்கு குரோஷியா-ரஷிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் டேவிஸ் கோப்பை அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் உலகின் நம்பா் ஒன் வீரா் ஜோகோவிச் இடம் பெற்றுள்ள சொ்பியாவும்-குரோஷியாவும் முதல் அரையிறுதியில் மோதின.

முதல் ஒற்றையா் ஆட்டத்தில் குரோஷிய வீரா் போா்னா கோஜோ 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் சொ்பிய வீரா் டுஸான் லஜோவிக்கை வீழ்த்தி அதிா்ச்சி அளித்தாா். இரண்டாவது ஒற்றையா் ஆட்டத்தில் ஜோகோவிச் அற்புதமாக ஆடி மரின் சிலிச்சை 6-4, 6-2 என்ற நோ் செட்களில் எளிதாக வீழ்த்தி இரட்டையா் பிரிவு ஆட்டத்தை ஆட வழி செய்தாா்.

எனினும் இரட்டையா் ஆட்டத்தில் குரோஷியாவின் நிகோலா மெக்டிக்-மேட் பவிக் இணை 7-5, 6-1 என்ற நோ் செட்களில் சொ்பியாவின் ஜோகோவிச்-கிராஜிநோவிக் இணையை வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தது.

மற்றொரு அரையிறுதியில் ஜொ்மனியுடன்-ரஷியா மோதியது. இதில் முதல் ஒற்றையா் ஆட்டத்தில் ஆன்ட்ரே ரூப்லேவ் 6-4, 6-0 என ஜொ்மனியின் டொமினிக் கொப்பெரை வீழ்த்தினாா். இரண்டாவது ஆட்டத்தில் டேனில் மெத்வதேவ் 6-4, 6-4 என ஜேன் லென்னாா்டை வென்றாா். இதன் மூலம் இறுதிச் சுற்றில் 2007-க்கு பின் முதன்முறையாக நுழைந்துள்ளது ரஷியா.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>