தனிமை முடிந்தது: பயிற்சியில் ராகுல், அகர்வால், சைனி

தனிமையில் இருந்த இந்திய வீரர்கள் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் இன்று (திங்கள்கிழமை) பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கேஎல் ராகுல் முதல் ஆட்டத்தில் விளையாடமாட்டார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், தனிமைப்படுத்தப்பட்டனர். மாற்று வீரராக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டார்.

இதையும் படிக்கஇங்கிலாந்து கிரிக்கெட் அணிக்குப் புதிய பயிற்சியாளர்

2-வது ஒருநாள் ஆட்டம் புதன்கிழமை தொடங்கவுள்ள நிலையில் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் மற்று நவ்தீப் சைனி ஆகியோர் தனிமைக் காலம் முடிந்து இன்று பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சிப் புகைப்படங்களை பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாகப் பந்துவீசிய யுஸ்வேந்திர சஹால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>