தனுஷின் 'வாத்தி' படப்பிடிப்பு துவங்கியது: வெளியான புதிய போஸ்டர்

அக்ஷய் குமார், சாரா அலிகானுடன் தனுஷ் நடித்திருந்த அட்ராங்கி ரே படத்தின் தமிழ் பதிப்பான கலாட்டா கல்யாணம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தனுஷ் நடிப்பில் ‘மாறன்’, ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளன.

இந்த நிலையில் தனுஷ் தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

இதையும் படிக்க | சர்தாரில் காவலர், வயதானவர் என இரட்டை வேடங்களில் கார்த்தி: இயக்குநர் பகிர்ந்த விடியோ

ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். வெங்கட் அட்லுரி இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் துவங்குகிறது. இதனை அறிவிக்கும் விதமாக வெளியான புதிய போஸ்டர் தனுஷ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>