தனுஷ் படத்திலிருந்து பாதியில் வெளியேறிய கதாநாயகி ?

தனுஷ் தற்போது வெங்கட் அட்லுரி இயக்கும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தெலுங்கில் சார் எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனிப்பட்ட காரணங்களால் படத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. இது தனுஷ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த தகவல் முற்றிலும் பொய்யானவை என படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதையும் படிக்க | சாய்னா குறித்து சர்ச்சை கருத்து: நடிகர் சித்தார்த்துக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

வாத்தி படத்துக்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படம் 1980களின் பின்னணியில் உருவாகிறது என்று கூறப்படுகிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>