தன் பட எழுத்தாளரை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா பட இயக்குநர்

நயன்தாராவின் மாயா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். தொடர்ந்து டாப்ஸி நடிப்பில் கேம் ஓவர் படத்தை இயக்கினார். இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனிடையே எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இறாவாக்காலம் படத்தை இயக்கியிருந்தார். ஆனால் அந்தப் படம் பொருளாதார சிக்கல் காரணமாக இன்னும் அந்தப் படம் வெளியாகவில்லை.

இயக்குநர் அஸ்வின் சரவணன் தற்போது  நயன்தாரா நடிக்கும் கனெக்ட் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ரௌடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் – நயன்தாரா இணைந்து தயாரிக்கின்றனர். 

இதையும் படிக்க | விக்ரம் – துருவ் இணைந்து நடித்துள்ள மகான் டீசர் வெளியானது

இந்த நிலையில் இயக்குநர் அஸ்வின் சரவணன் தனது படங்களில் எழுத்தாளராக பணிபுரியும் காவ்யா ராம்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் திருண புகைப்படங்களை பகிர்ந்துகொண்ட அஸ்வின் சரவணன், பேப்பர் பேனாவில் துவங்கியது. தற்போது கவிதையாக நிறைவுபெற்றுள்ளது. என்னுடன் பயணித்ததற்கு காவ்யா ராம்குமாருக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>