தமிழகத்தில் 1500ஐ நெருங்கும் ஒருநாள் கரோனா பாதிப்பு

 

தமிழகத்தில் புதிதாக 1489 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 1489 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,49,534 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 611 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதையும் படிக்க | புதிய அப்டேட் கொடுத்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழு

 

இதுவரை மொத்தம் 27,04,410 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,784 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 8,340 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டங்கள்:

சென்னையில் அதிகபட்சமாக 682 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, செங்கல்பட்டில் 168 பேருக்கும், கோவையில் 75 பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>