தமிழகம் 354 ரன்கள்: ஜெகதீசன் சதம், அதிரடியாக விளையாடி 79 ரன்கள் எடுத்த ஷாருக்கான்

 

விஜய் ஹசாரே போட்டியில் கர்நாடகத்துக்கு எதிராகத் தமிழக அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் குவித்துள்ளது.

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியின் காலிறுதியில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கர்நாடக அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்க வீரர் பாபா அபரஜித் 13 ரன்களில் ஆட்டமிழந்தாலும் அதன்பிறகு ஜோடி சேர்ந்த என். ஜெகதீசன் – சாய் கிஷோர் ஆகியோர் அற்புதமான கூட்டணி அமைத்தார்கள். சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர், 71 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் என். ஜெகதீசன் 101 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தமிழக அணி 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 44, இந்திரஜித் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். 

கடைசி 10 ஓவர்களில் ஷாருக்கானின் அதிரடி வேட்டை நடைபெற்றது. 7-வது வீரராகக் களமிறங்கிய ஷாருக் கான் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். கடைசியில் ஆட்டமிழக்காமல் 39 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்து அசத்தினார். தமிழக இன்னிங்ஸின் கடைசிப் பகுதியில் ஒற்றை ஆளாக கர்நாடக அணிக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார். 

தமிழக அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் எடுத்தது. கர்நாடகத்தின் பிரவீன் டுபே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>